புதுடெல்லி : மொபைல்போன் மூலம் பண பரிமாற்றம் செய்யும் திட்டம், முதல் கட்டமாக டெல்லி உள்ளிட்ட 4 மாநிலங்களில் தொ்டங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்,தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் தொடங்கி வைத்தார்.
தபால் துறையும், பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைந்து, முதற்கட்டமாக டெல்லி, பீகார், பஞ்சாப், கேரளா ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் இத்திட்டத்தை தொடங்கியுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் ஒருவர் பணத்தை பரிமாற்றம் செய்ய விரும்பினால்,தபால் அலுவலகத்தில் அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தான் அனுப்ப நினைக்கும் பணத்தை செலுத்த வேண்டும். யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறாரோ, அவரது மொபைல்போன் எண்ணையும் கொடுக்க வேண்டும்.
இதனையடுத்து அனுப்புநருக்கு மட்டும் ஒரு ரகசிய எண் தபால் அலுவலகத்தில் அளிக்கப்படும்.அந்த ரகசிய எண்ணை பணத்தை பெறப்போகும் நபருக்கு அனுப்புபவர் தெரிவிக்க வேண்டும். பணத்தை பெறுபவர் குறிப்பிட்ட தபால் அலுவலகத்தில் அந்த எண்ணை அளித்து பணம் பெறலாம்.
No comments:
Post a Comment