Saturday, November 24, 2012

1.5 லட்சம் போஸ்ட் ஆபிஸ்கள் நவீனமயமாக்க அரசு அனுமதி



புதுடெல்லி :
               ரயில் போக்குவரத்தில் தனியார் பங்கேற்பு, 1.55 லட்சம் போஸ்ட் ஆபிஸ்களை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுவரை சாலை போக்குவரத்து வசதி செய்யப்படாத பழங்குடியினர் வாழும் 2,687 கிராமங்களுக்கு ரூ.5,929 கோடி செலவில் சாலைகளை அமைக்கும் திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் போஸ்ட் ஆபிஸ்களை அடுத்த 2 ஆண்டுகளில் நவீனமயமாக்க ரூ.4,909 கோடி ஒதுக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. வங்கிகளைப் போல போஸ்ட் ஆபிஸ்களிலும் கோர் பாங்கிங் வசதியை ஏற்படுத்துவது, தபால்கள், அரசின் மானிய உதவிகள் ஆகியவை விரைவாக மக்களைச் சென்றடைய தேவையான வசதிகளைச் செய்வது, நாட்டில் உள்ள அனைத்து கிளைகளிலும் தபால் துறையின் சேவைகள் தடையில்லாமல் கிடைக்கச் செய்வது போன்றவை இத்திட்டத்தில் அடங்கும்.

Courtesy: Dinakaran Daily




No comments:

Post a Comment