புதுக்கோட்டையில் RPLI மேளா
கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பாலிசி சேகரிப்புக்கான சிறப்பு கூட்டம் மற்றும் தீவிர பாலிசி சேகரிப்பு முகாம் 02.10.12 அன்று தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள மேனா திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியை புதுகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செல்வி.R.செல்வராணி அவர்கள் தலைமை ஏற்று RPLI மற்றும் அஞ்சலக துறையில் வணிக மேம்பாடு குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் திரு. பூபதி (Marketing Executive), திரு. M. அப்துல் ரஹீப், திருமதி. R. காமாட்சி அவர்கள் அஞ்சல் அலுவலகங்களில் அன்றாடம் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் உரையாற்றினர். விழாவில் அஞ்சலக ஊழியர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
திரு .திருஞானம் (ASP, Head Quarters), திரு.குமார்(Marketing Executive) அவர்களது உரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது
No comments:
Post a Comment